குட் பேட் அக்லி
பிரம்மாண்ட பட்ஜெட்டில் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க
அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவானது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ள நிலையில் 15 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?.
இப்படம் 15 நாட்களில் உலகளவில் ரூ. 248 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் மிகப்பெரிய லாபத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.