சிறுவர் நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபை அமர்வை நேரில் நேற்று 18.08.2026 அன்று பார்வையிட்டனர்
சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்பட்டு வரும் சிறுவர் நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்று மஸ்கெலியா பிரதேச சபைக்கு விஷேட விஜயம் செய்து, அங்கு நடைபெற்ற சபை அமர்வை நேரடியாக பார்வையிட்டனர்.
மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் திரு. கந்தையா ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற மாதாந்த சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு , பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
குறிப்பாக சிவனொளிபாதமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிங்களப் பெயர்களைக் கொண்ட கிராமங்கள் மற்றும் இடங்கள் காணப்படுவதற்கான காரணங்கள் தொடர்பாகவும் சபையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தாய்லாந்தில் இம்மாதம் நடைபெறவுள்ள விசேட நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஆசிய ஜனநாயக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நுவரெலியா மாவட்டத்திலிருந்து நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி சுற்றுக்கு நான்கு சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
மாநெலி தோட்டத்தைச் சேர்ந்த செல்வன். விஜயகுமார் காமேஸ்வரன்
நோர்வூட் மேற் பிரிவைச் சேர்ந்த ரக்க்ஷிதா மவுண்ட்வேர்னன், தோட்டத்தைச் சேர்ந்த சத்தியராஜ் சஸ்மிகா ,ஸ்மோல் ட்ரேட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் ஹர்மிக ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட நான்கு சிறுவர் பிரதிநிதிகளையும் மஸ்கெலியா பிரதேச சபையின் *தவிசாளர், உப தவிசாளர், செயலாளர் மற்றும் சபை உறுப்பினர்கள்* கௌரவித்து, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த விஜயம் சிறுவர் பிரதிநிதிகளுக்கு உள்ளூராட்சி நிர்வாகத்தின் செயற்பாடுகள், சபை அமர்வுகளின் நடைமுறைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ளும் முக்கியமான அனுபவமாக அமைந்ததுசிறுவர் நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபை அமர்வை நேரில் நேற்று 18.08.2026 அன்று பார்வையிட்டனர்
சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்பட்டு வரும் சிறுவர் நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்று மஸ்கெலியா பிரதேச சபைக்கு விஷேட விஜயம் செய்து, அங்கு நடைபெற்ற சபை அமர்வை நேரடியாக பார்வையிட்டனர்.
மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் திரு. கந்தையா ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற மாதாந்த சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு , பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
குறிப்பாக சிவனொளிபாதமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிங்களப் பெயர்களைக் கொண்ட கிராமங்கள் மற்றும் இடங்கள் காணப்படுவதற்கான காரணங்கள் தொடர்பாகவும் சபையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தாய்லாந்தில் இம்மாதம் நடைபெறவுள்ள விசேட நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஆசிய ஜனநாயக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நுவரெலியா மாவட்டத்திலிருந்து நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி சுற்றுக்கு நான்கு சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
மாநெலி தோட்டத்தைச் சேர்ந்த செல்வன். விஜயகுமார் காமேஸ்வரன்,நோர்வூட் மேற் பிரிவைச் சேர்ந்த ரக்க்ஷிதா
மவுண்ட்வேர்னன் தோட்டத்தைச் சேர்ந்த சத்தியராஜ் சஸ்மிகா ,ஸ்மோல் ட்ரேட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் ஹர்மிகா ,ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட நான்கு சிறுவர் பிரதிநிதிகளையும் மஸ்கெலியா பிரதேச சபையின் *தவிசாளர், உப தவிசாளர், செயலாளர் மற்றும் சபை உறுப்பினர்கள்* கௌரவித்து, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த விஜயம் சிறுவர் பிரதிநிதிகளுக்கு உள்ளூராட்சி நிர்வாகத்தின் செயற்பாடுகள், சபை அமர்வுகளின் நடைமுறைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ளும் முக்கியமான அனுபவமாக அமைந்தது.