முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி; அடுத்த போரையும் சந்திக்க நாடு தயாரா? – ரணில் எச்சரிக்கை

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில், அதற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளவுள்ள பொருளாதார சவால்களுக்கு அரசாங்கம் தற்போதே திட்டமிட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய “யுத தெக்கட உர தீ”  என்ற நூல் வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும் என்பதால், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியின் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவ்வாறு ஏற்பட்டால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அந்த 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு கடன்களைச் செலுத்தத் தவறினால் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தான் எப்போதும் சுபச் செய்திகளை மாத்திரம் கூறுவதில்லை எனவும், நாட்டின் உண்மையான மற்றும் அபாயகரமான பொருளாதார நிலைமையையும் வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, “இன்னொரு பொருளாதாரப் போர் வரவிருக்கின்றது; அதிலிருந்து தப்பிக்கத் தவறினால் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

Source: https://samugammedia.com/pressure-on-sri-lanka-again-is-the-country-ready-to-face-the-next-war–ranil-warns-1787113745

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.