இலங்கையின் ஜனாதிபதி தேர்தலினுடைய பிரதிபலிப்புக்கள் நாட்டினுடைய தேர்தல் களத்திலே ஒரு மாறுதலை ஏற்படுத்த கூடியதாக அமையும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் (Geetaponkalan) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் (Lankasiri) ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜானதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சஜித் பிரேமதாச (Sajith Premadasa), அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உள்ளிட்டவர்களுக்கு இடையிலான போட்டி நிலை அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் மூவரும் தேர்தல் களத்திலே தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
தேர்தல் பற்றிய கருத்துக்களும் நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. இறுதிவரையும் யார் வெற்றியாளர் என்பதை கணிக்க முடியாத சூழலில் அரசியல் ரீதியாக பலத்த சவால் நிலவி வருகின்றது.
இலங்கை ஒரு பொருளாதார ரிதீயில் மோசமான காலகட்டத்தில் இருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டதன் காரணமாக தான் தற்போது நாடு ஸ்திரத்தன்மையடைந்து சரியான பாதையில் செல்கிறது.
எனவே இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றிபெறுவாராக இருந்தால் நாடு பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும்.
அதேவேளை லஞ்சம், ஊழல் போன்ற விடயங்களை ஒழிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, ஆகையால் அவர் ஜனாதிபதியானால் லஞ்சம், ஊழல் போன்ற விடயங்கள் தொடர்ச்சியாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,