மட்டக்களப்பு (Batticaloa) நகரில் உள்ள பிரதான பகுதிகளில் உள்ள மக்களுக்கான வாக்காளர் அட்டை வழங்கப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது நேற்று (3) ஆரம்பமாகியுள்ளது.
வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத பொதுமக்கள் அவர்கள் நேரடியாக மாவட்ட அஞ்சல் திணைக்களங்களுக்குச் சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும்.
வாக்காளர் அட்டை
அல்லது மாவட்டத்தின் பிரதான தேர்தல் திணைக்களத்துக்குச் சென்று அவர்களது அடையாளங்களை
நிரூபித்து பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்
அலுவலகத்தின் பிரதி ஆணையாளர் எஸ் சுபியான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் 4லட்சத்து 49 ஆயிரத்து 606 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் வாக்காளர்களுக்கான வாக்கு அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை அஞ்சல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இச்செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்தச் செயற்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.