முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் நள்ளிரவில் இறக்கப்பட்ட யானைகள்: பீதியில் உறைந்துள்ள மக்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணி – குளவிசுட்டான் கிராமத்துக்குச் செல்லும் குறிசுட்டகுளம் சந்தியில், பெரிய லொறிகளில் கொண்டுவரப்பட்ட யானைகள் அண்மையில் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யானைகளுடன் சேர்த்து பெருமளவிலான கரும்புத்தடிகளும் குறித்த சந்தியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பாகவே இந்தப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். உயிரிழந்த விவசாயியின் இறுதிக்கிரியைகள் கூட இன்னும் நிறைவடையாத சூழ்நிலையில், மீண்டும் அதே பகுதியில் லொறிகளில் யானைகள் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளமை விவசாயிகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் தமது விவசாய நிலங்களையும் உயிர்களையும் பாதுகாக்கப் போராடி வரும் நிலையில், திட்டமிட்டு யானைகள் இங்கு இறக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது

எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, கள நிலவரத்தை நேரில் ஆராய வேண்டும் என்றும், அச்சத்தில் இருக்கும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கு உரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/elephants-let-down-at-midnight-in-vavuniya-people-frozen-in-fear-1787116271

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்