இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் 1.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய கையிருப்பு 6,873 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பை முழு விவரங்களுடன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
தற்போதைய கையிருப்பு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகை 6,766 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஏற்பாட்டின் மூலமான நிதியும் இதில் உள்ளடங்கப்பட்டு, தற்போது 6,873 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/sri-lanka-s-official-reserve-assets-increase-1780667486

