அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ரிசாட் பதியுதீன்(risad badhiutheen) ரணில் விக்கிரமசிங்க
wickremesinghe) ஆதரவா என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
வவுனியா(vavuniya), வைரவபுளியங்குளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பிரசார கூட்ட மேடையை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் நேற்று(31.08.2024)
பார்வையிட்டுள்ளார்.
வவுனியாவிற்கு இன்றைய தினம் (01.09.2024) வருகை தரும் ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் மைதானத்தில்
நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார். அதற்கான
ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் இடம்பெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற
உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவற்றை பார்வையிட்டிருந்ததுடன், அங்கு நின்ற
சிலருடன் உரையாடியும் இருந்தார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Source: https://tamilwin.com/article/risad-badiuddin-supported-towards-ranil-1725170604

