முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார மற்றும் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை பொருளாதாரம் மிக வேகமாக மீட்சியடைந்து நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி | Economy Is Getting Good Track Says Cb

குறுகிய காலத்தில் இத்தகைய வேகமான பொருளாதார நிலையை அடைய முடிந்தது ஒரு சிறப்பான சாதனையாகும் எனவும், இத்தகைய நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியமை, அந்நியச் செலாவணி இருப்பை மீளக் கட்டியெழுப்பியமை மற்றும் அரசாங்கக் கடன்களை மறுசீரமைத்தமை ஆகியவற்றின் மூலம் நாட்டின் பேரியல் பொருளாதார உறுதித்தன்மை தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் இறையாண்மை கடனளவீட்டை மேலும் உயர்த்தும் நோக்கில், உலகின் மூன்று பிரதான சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களுடனும் தற்போது தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.