முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

புதிய இணைப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக
தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூர்
பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,
இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர்
பொதுச்சுடர் ஏற்றினார்.

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்
தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த
இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

யாழ் நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Tribute To Tyaga Deepam Thilipan

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக்
குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும்
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மற்றும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு
வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில்
புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,
தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை
வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி
சாவைத் தழுவிக் கொண்டார்.

முதலாம் இணைப்பு

தியாக தீபம் திலீபனின் 37 ஆவது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு, யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று மாலை (25) யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நினைவுத் தூபி 

இந்தநிலையில், யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி
தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றது.

யாழ் நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Tribute To Tyaga Deepam Thilipan

மேலும், இதன் போது திலிபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/tribute-to-tyaga-deepam-thilipan-1727308131

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.