கம்பஹா, பமுனுகம – எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவர்,
அவரது 4 வயது மகள், 13 வயதுடைய சிறுவன் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

