முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல்

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் (Nalin Herath) தெரிவித்தள்ளார்.

அத்துடன் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று (03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது, “வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?“ என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் திறக்கப்பட்ட வீதி 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவ முகாம்களை அகற்றுவதாயின் அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல் | Removal Of Military Camps In The North Defence Min

இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி – தோலக்கட்டி சந்தி வரையிலான வீதி சுமார் 3 தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டது.

வடக்கு ஆளுநரின் கோரிக்கை 

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல் | Removal Of Military Camps In The North Defence Min

அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையைப் பின்பற்றி எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசனையுடன் முப்படையும் காவல்துறையினரும் செயற்பட்டு வருகின்றனர்“ என தெரிவித்தார்.

அதியுயர் பாதுகாப்பு வலயம்

இதேவேளை இது தொடர்பில் இராணுப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார, ”யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமையவே இந்த வீதி திறக்கப்பட்டது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல் | Removal Of Military Camps In The North Defence Min

இந்த வீதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் சென்றதால் மூடப்பட்டிருந்தது. தற்போது வீதி திறக்கப்பட்டுள்ளதே தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை.

எனவே வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.