முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (31) முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க ரவி கருணநாயக்கவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தது. அப்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறு ஒரு திகதி வழங்குமாறு தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ரவி கருணநாயக்கவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரிடம் குறித்த சம்பவம் தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/ravi-karunanayake-prominent-in-the-bribery-committee-arrested-1788163429

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்