முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் அதிரடி சுற்றிவளைப்பு: பெருமளவு போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பின் வெல்லம்பிட்டிய மற்றும் மட்டக்குளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (CCD) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் நேற்று (02) நண்பகல் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 130 மின்னணு சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து நேற்று மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 130 மின்னணு சிகரெட்டுகளும் அவற்றை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் 1,000 போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று சம்பவங்கள் தொடர்பிலும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு மற்றும் குற்றப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/dramatic-raid-in-colombo-three-arrested-with-large-amounts-of-drugs-1788410409

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.