முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப்

அமெரிக்க (United States) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான உணவகம் ஒன்றின் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது.

புத்தாண்டு அன்று (01.01.2025) நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் டொனால்டு டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான குறித்த உணவகம் உள்ளது.

சைபர் டிரக் 

இந்த உணவகத்திற்கு வெளியே டெஸ்லா சைபர் டிரக் எனப்படும் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புத்தாண்டு நாளான புதன்கிழமை திடீரென்று இந்த சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது.

வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப் | Cybertruck Explodes Outside Trump Las Vegas Hotel

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்த கூட்டத்தினா் மீது காரை ஏற்றி மா்ம நபா் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

வெடிகுண்டு 

35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த நபா் ஓட்டி வந்த காரில் ஐஎஸ் கொடி மற்றும் பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நியூ ஆா்லியன்ஸில் நடந்ததை போன்று, லாஸ் வேகாஸில் சைபர் டிரக் வெடித்தது தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விசாரணை

இந்த தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது,  “இரு சம்பவங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப் | Cybertruck Explodes Outside Trump Las Vegas Hotel

இதில், இரண்டுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு சம்பவங்கள் குறித்தும் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.