இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எஞ்சிய 5,800 யூதர்களையும் தங்கள் நாட்டில் குடியமர்த்தும் திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பினே மெனாஷே சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மிசோரம் மற்றும் மணிப்பூரில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் யூத மதத்தின் ஒரு பிரிவினர் என்ற அடிப்படையில், அவர்களை இஸ்ரேலுக்கு குடிபெயரச் செய்வதற்கான திட்டத்துக்கு அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டின் இறுதி
இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,200 பேர் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலில் குடிபெயர உள்ள நிலையில் எஞ்சிய 5,800 பேரை அழைத்துக் கொள்வதற்கான திட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் முழுமையாக வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கான விமான பயண செலவுகள், குடிபெயர்வுக்கு முந்தைய நடைமுறைகள் மற்றும் தற்காலிக வீடுகள் உள்ளிட்டவைகளுக்கான திட்ட செலவாக கிட்டத்தட்ட 238 கோடி ரூபாய் சிறப்பு நிதி தேவைப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 4,000 பேர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

