சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை காப்பாற்ற ஜனனி போராடி வருகிறார். சக்தி இருக்கும் இடத்தை தேடி அவர் சென்றுகொண்டிருக்கும் நிலையில், வில்லனின் ஆட்கள் அவரை கண்காணிக்கின்றனர்.
ஜனனி அவர்கள் இடத்தை நோக்கி வருவதாக ராமசாமிக்கு தகவல் வருகிறது.

இன்றைய ப்ரோமோ
இன்றைய எபிசோடு ப்ரோமோவில் ஜனனி தற்போது சக்தி இருக்கும் பகுதியை நோக்கி செல்லும்நிலையில் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்.
சக்தியின் உடைகள் அங்கே சிதறி கிடப்பதை பார்த்து, அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கதறி அழுகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு திட்டம் போடுகின்றனர். அது என்ன என ப்ரோமோவை பாருங்க.

