முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து எழுந்த சர்ச்சை: ட்ரம்பின் அதிரடி பதில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பெயர் குறிப்பிடாத நபர்கள் மற்றும் அமைப்புகளை துரோகக் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்த ஊடகங்கள் மற்றும் நபர்களை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

ட்ரம்ப் அதிரடி

இத்தகைய கூற்றுகள் துரோகத்தனமானவை என்றும், அவை 100 சதவீதம் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் எளிதாக வெற்றி பெற்று வரும் போரில் அமெரிக்கா தோல்வியடைவதை அவர்கள் விரும்புகிறார்கள். நான் வெற்றி பெறுவதைப் பார்ப்பதைவிட அதையே அவர்கள் விரும்புகிறார்கள் என ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டார்.

மற்றொரு பதிவில், துரோகக் கும்பல் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து சரியாக செய்தி வெளியிடாதவர்களை விமர்சித்த அவர், தங்களிடம் அதிக மற்றும் நடுத்தர தரத்திலான வெடிமருந்துகள் பெருமளவில் இருப்பதாகக் கூறினார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீடித்த போர் தொடங்கியதிலிருந்து, ஆயுதங்கள் குறைவாகக் கிடைப்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஆயுதக் கையிருப்பு

வியாழக்கிழமை அவர் மீண்டும், அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வெடிமருந்துகளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் ஆயுதங்களை சேமித்து வருகிறோம்.

அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவுக்காகவே வைத்திருக்கிறோம். எனினும், நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும்” என ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து எழுந்த சர்ச்சை: ட்ரம்பின் அதிரடி பதில் | Trumps Latest Rant Reports Of Weapons Shortage

அதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தையும் ட்ரம்ப் விமர்சித்தார்.

தனது நிர்வாகம் ஈரானுடனான போரில் பயன்படுத்தியதைவிட அதிகமான ஆயுதங்களை பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு இலவசமாக வழங்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கும் நேட்டோவுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா கேட்டிருந்தால் அதற்கான பணத்தை செலுத்தியிருக்கும். தற்போது அந்தப் பணத்தை நாங்கள் கோரப் போகிறோம், சற்று தாமதமாக இருந்தாலும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.