சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இலங்கையின் ஏழாவது மதிப்பாய்வுக்காக இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் செய்ய உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தலைமையிலான இந்த பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, எதிர்வரும் 10 முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து, உள்ளூர் அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
இதன்போது அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள், சீர்திருத்தக் கொள்கை சட்டகங்கள் மற்றும் நீண்டகால மூலோபாய சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
Source: https://tamilwin.com/article/imf-representatives-visisting-srilanka-1788573259

