முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் அமைச்சர்கள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாளை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நீதிமன்றில் காரணிகளை முன்வைத்த அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, போலியாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி, முன்னாள் சுகாதார அமைச்சர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்தபோது, ​​அமைச்சரவையில் 18 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை | Ex Minister Prasanna Ranatunga Appears Before Cid

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் எவ்வாறான மருந்துகள் தேவை என்பது குறிப்பிடப்படாததன் பின்னணியில், உண்மையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதா அல்லது அமைச்சரவை பத்திரத்திற்கு விசாரணையின்றி எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது என்பதற்கான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரை இன்று காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவு 01 இல் முன்னிலையாகுமாறு புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்(CID) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று (21)குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana), ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) மற்றும் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஆகியோரும் இன்று (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சபையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் அப்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்கள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை | Ex Minister Prasanna Ranatunga Appears Before Cid

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்றைய தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.