முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் சர்வதேச மாணவர்களுக்கான பிரபல பட்டப் படிப்பு இரத்து

அவுஸ்திரேலிய சர்வதேசக் கல்வி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கும் வகையில்,
வெளிநாட்டு மாணவர்களுக்கான பிரபல ‘மேலாண்மை (கற்றல்)’ பட்டப் படிப்பின் புதிய சேர்க்கையை
அவுஸ்திரேலிய அரசு இரத்து செய்துள்ளது.

இந்தத்தகவலை சர்வதேசக் கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில்
அறிவித்துள்ளார்.

போலி மாணவர்கள் சிலர் உள்நாட்டு விசா இடமாற்றங்களுக்காக இந்தப் படிப்பைத்
தவறாகப் பயன்படுத்துவதும், அதிகளவில் விசா நிராகரிப்புகள் பதிவாவதும்
இமுடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரத்து

அத்துடன் ​ ஓக்டோபர் 5, 2026 முதல் CRICOS பதிவுபெற்ற கல்வி நிறுவனங்கள்
இந்தப் படிப்பிற்கு புதிய சர்வதேச மாணவர்களைச் சேர்க்கத் தடை விதிக்கப்படுவதுடன், படிப்பைத் தொடங்காத மாணவர்களுக்கான சேர்க்கை உறுதிப்படுத்தல்கள் (CoE)
ஒக்டோபர் 5 தானாகவே இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே படிப்பைத் தொடங்கிப் படித்து வரும் 15,772 சர்வதேச மாணவர்கள்
பாதிப்பின்றித் தங்கள் படிப்பை முழுமையாக முடிக்க அனுமதிக்கப்படுவர்.

வெளிநாடொன்றில் சர்வதேச மாணவர்களுக்கான பிரபல பட்டப் படிப்பு இரத்து | Degree International Students Canceled Australia

இந்தநிலையில் இக்கட்டுப்பாடு உள்நாட்டு அவுஸ்திரேலிய மாணவர்களையோ அல்லது பிற
பட்டப் படிப்புகளையோ பாதிக்காது என ஜூலியன் ஹில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ​2025-இல் கொண்டுவரப்பட்ட கல்வி நேர்மை சீர்திருத்தச் சட்டத்தின்
கீழ், முறைகேடுகளைத் தடுக்க அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின்
அடிப்படையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.

Source: https://tamilwin.com/article/degree-international-students-canceled-australia-1788594963

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.