பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், தனக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு இன்று (07) உயர் நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டைத் திரும்பப் பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இதே விடயத்தை மீண்டும் நீதிமன்றத்தில் முன்வைக்க யோஷித ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/pf-scheme-case-yoshitha-rajapaksas-appeal-has-been-rejected-1788771316

