முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி – சிறைச்சாலையை சுற்றி விசேட பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் நாமல் ராஜபக்ச தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் மூன்று பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 04ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/permission-to-bring-food-home-for-us—special-security-around-the-prison-1788767290

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்