முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரவில் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் காட்டு யானைகள்; உயிர் அச்சத்தில் அம்பாறை மக்கள்

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களை நோக்கி இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊடுருவி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விவசாயிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், பொதுமக்களும் இரவு வேளைகளில் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வருவதால், மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பாரிய அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகள் வழமையாக நடமாடும் பாதைகள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் இடங்களை அடையாளம் கண்டு, அப்பகுதிகளில் முறையான கண்காணிப்பு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அத்துடன், அவசர நிலைமைகளின்போது பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அவசர உதவிப் பிரிவுகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/wild-elephants-raiding-settlements-at-night-ambarai-people-in-fear-for-their-lives-1788844338

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.