முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து கடும் அதிருப்தி

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

09 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து கடும் அதிருப்தி | Election Manifestos Of Presidential Candidates

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞாபனம்

இந்நிலையில், மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞாபன ரீதியான அடிப்படையில் 12 பரிந்துரைகள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் இம்முறை போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முனவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 06.09.2024 வரை வெளியிட்ட விஞ்ஞாபனங்களில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்ற விஞ்ஞாபனப் பகுப்பாய்வை எமது நிறுவனம் மேற்கொண்டது. அப்பகுப்பாய்வானது கீழ்காணும் அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எமது அவதானிப்பின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பாக இன்னமும் மகிழ்ச்சியடைய முடியாது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து கடும் அதிருப்தி | Election Manifestos Of Presidential Candidates

எனினும், சில வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் இவை தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் பாராட்டப்படவேண்டியவையே.

எமது நாட்டில் பிரதான பிரச்சினையாக அமையும் மதுசாரம், புகைத்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதானது, பொது மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் உட்பட சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

ஆகவே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்ளைகளுடன் இப்பரிந்துரைகளையும் இணைத்துக்கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

மேலும், இம்முறை தேர்தலினூடாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தி நாட்டில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விரைந்து செயற்படுவார் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் எதிர்பார்க்கின்றது என்றுள்ளது.  

GalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/election-manifestos-of-presidential-candidates-1725889028

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.