முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி, நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தமது சம்மேளனம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை ஆகியவை தற்போது கடுமையான பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவது தொடர்பில் தெரிவித்துள்ள போதிலும், புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு முன்னர் தற்போது இயங்கி வரும் 17 அரச பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதாகவும், பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/university-professors-will-go-on-an-identity-strike-tomorrow-1788849548

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்