முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமல் ராஜபக்ஷவிடம் 2 மணிநேரம் விசாரணை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

குறித்த விமானக் கொள்வனவு இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய சூழ்நிலைகள் மற்றும் அதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.

சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்திய ‘எயார்பஸ் ஊழல்’ விவகாரம் தொடர்பில் இலங்கையில் மீண்டும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அக்காலப்பகுதியில் அமைச்சரவையில் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இப்படி இருக்க அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source: https://samugammedia.com/2-hour-questioning-of-samal-rajapaksa-1788851778

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.