இலங்கையில் பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு 80 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 23 பில்லியன் ரூபாய்) பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பகுதியில் வைத்து குறித்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பில், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் எனக் கூறி, தந்தி பணப் பரிமாற்றம் (Telegraphic Transfer – T/T) மூலம் குறித்த பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

