முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர் சர்ச்சையில் தமிழரசுக் கட்சி – யாழில் தொடுக்கப்பட்ட வழக்கு

புதிய இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச்
செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை யாழ்.
நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் கிழக்கு
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல்
செய்துள்ளார்.

அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai senathirajah), பதில் பொதுச்செயலாளர்
ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக்
குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்த தவணை நவம்பர் 18 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய வழக்கொன்றை யாழ். நீதிமன்றில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர் சர்ச்சையில் தமிழரசுக் கட்சி - யாழில் தொடுக்கப்பட்ட வழக்கு | Court Case Filed Ilankai Tamil Arasu Kachchi

குறித்த வழக்கு யாழ்ப்பாண (jaffna) நீதிமன்றத்தில் தமிழரரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா (mavai senathirajah), ப.சத்தியலிங்கம், சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிலரின் எதேச்சதிகார செயற்பாடுகள்

குறித்த வழக்கில், தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க வேண்டும்.

தொடர் சர்ச்சையில் தமிழரசுக் கட்சி - யாழில் தொடுக்கப்பட்ட வழக்கு | Court Case Filed Ilankai Tamil Arasu Kachchi

மற்றும் கட்சியின்
யாப்பின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுச்சபை கூட்டப்பட
வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுச்சபை
கூட்டப்படவில்லை எனவும் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழரசு கட்சியில் சிலரின் எதேச்சதிகாரம் மிக்க செயற்பாடுகள் தலைவிரித்தாடி
வருகின்ற நிலையில் பலர் அந்த கட்சியை விட்டு வெளியேறியும், பதவிகளை துறந்த
வண்ணமும் உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அக் உறுப்பினரால் இந்த வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாண
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் அரசுக் கட்சியை இந்த
வழக்குகள் பாதிப்படையச் செய்யும் என கருதப்படுகிறது.

செய்திகள் – கஜிந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

Source: https://ibctamil.com/article/court-case-filed-ilankai-tamil-arasu-kachchi-1728903436

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.