முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹட்டன் CTB டிப்போவிற்கு புதிய பேருந்துகளை அவசரமாக ஒதுக்குமாறு கோரிக்கை

கொழும்பு–ஹட்டன் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் CTB டிப்போவிற்கு புதிதாக வரவழைக்கப்பட்ட பேருந்துகளை அவசரமாக ஒதுக்கி வழங்குமாறு கோரிக்கை.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு,

கொழும்பு மற்றும் ஹட்டன் இடையிலான பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக, ஹட்டன் CTB டிப்போவிற்கு புதிய பேருந்துகளை வழங்க வேண்டியுள்ள அவசரத் தேவையை தங்களது உடனடி கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தற்போது கொழும்பு–ஹட்டன் மற்றும் ஹட்டன்–கொழும்பு வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல பேருந்துகள் மிகவும் பழைய நிலையில் காணப்படுகின்றன.

 இதனால் அடிக்கடி இயந்திரக் கோளாறுகள் மற்றும் திடீர் பழுதுகள் ஏற்படுவதுடன், பயணிகள் நீண்ட நேரம் பேருந்துகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹட்டன் பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாடப் பயணங்களுக்காக பொதுப் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.

தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காகவும் அவர்கள் இந்தப் அரச பேருந்து சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே, தடையற்றதும் நம்பகமானதுமான அரச பொதுப் போக்குவரத்து சேவை இந்த மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

சமீபத்தில் இலங்கைக்கு புதிதாக பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.

 எனவே, புதிதாக வரவழைக்கப்பட்டுள்ள அந்தப் பேருந்துகளில் இருந்து ஹட்டன் அரச பேருந்து CTB டிப்போவிற்கு தேவையான எண்ணிக்கையில் பேருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கி வழங்கி, கொழும்பு–ஹட்டன் மற்றும் ஹட்டன்–கொழும்பு போக்குவரத்து சேவைகளையும் ஹட்டன் கண்டி, கண்டி ஹட்டன், ஹட்டன் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் ஹட்டன் நல்லதண்ணி கதிர்காமம் கதிர்காமம் நல்லதண்ணி ஆகிய பகுதிகளில் அரச பேருந்து சேவைகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஹட்டன் CTB டிப்போவிற்கு புதிய பேருந்துகளை வழங்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கணிசமாக மேம்படும் என நான் நம்புகிறேன். 

இது ஹட்டன், நுவரெலியா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

எனவே, இவ்விடயத்திற்கு தங்களது அவசர கவனத்தை செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, மேலும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிகவும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இவ்விடயத்தில் தங்களது அன்பான கவனமும், ஒத்துழைப்பும், தலையீடும் கிடைப்பது பெரிதும் பாராட்டத்தக்கதாக இருக்குமென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளதுள்ளார்

Source: https://samugammedia.com/request-to-urgently-allocate-new-buses-to-the-hatton-ctb-depot-1789119051

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.