முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை: நிறுவனத்திற்கு 3 இலட்சம் அபராதம்

கொழும்பு – பொரளையில் அமைந்துள்ள பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, உச்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் உரிய உற்பத்தி விபரங்கள் இன்றி அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம்  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, நிறுவனத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் குறித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அழகுசாதனப் பொருட்களை கொள்வனவு செய்யும் மற்றும் பயன்படுத்தும் பொதுமக்கள், பொருட்களின் காலாவதி திகதி, விலை மற்றும் உற்பத்தி விபரங்களை சரிபார்த்து அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/sale-of-expired-beauty-products-company-fined-3-lakh-1789360961

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.