முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசியம் கட்டிக்காத்த உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் தமிழரசுக் கட்சி: மணிவண்ணன் குற்றச்சாட்டு

இவ்வளவு காலமும் தமிழ் தேசியம் கட்டிக்காத்த உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் நிலையை இலங்கைத் தமிழரசுக் கட்சி எம் மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சியில்
நேற்று (16) விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது
இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த சட்டத்தரணி மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் வடமராட்சி மண்ணிற்கு விஜயம் செய்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த இடத்திற்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.

வடமராட்சிக்கு நேற்று (16.09.2024) விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில்
சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன்
கோவிலுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்ட பா.அரியநேந்திரனுக்கு ஆலய பிரதம குரு
ஆசிகளை வழங்கியிருந்தார்.

பொதுமக்கள் பலர் பங்கேற்பு

அங்கிருந்து வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதி
எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் நினைவிடத்திற்கு
சென்று தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும் மரியாதை
செலுத்தியிருந்தார்.

தேசியம் கட்டிக்காத்த உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் தமிழரசுக் கட்சி: மணிவண்ணன் குற்றச்சாட்டு | Ariyanethran Visits Vadamaradchi

தொண்டைமானாறு அம்மா மணிமண்டபத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் அமைப்பாளரும்
வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான செல்வேந்திரா தலைமையில்
இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்திலும் பா. அரியநேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.

தேசியம் கட்டிக்காத்த உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் தமிழரசுக் கட்சி: மணிவண்ணன் குற்றச்சாட்டு | Ariyanethran Visits Vadamaradchi

இதன்போது, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர்
க.வி.விக்னேஸ்வரன், பொருளாளர் வி.பி. சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின்
அமைப்பாளர்களான த.சிற்பரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர்
பங்கேற்றிருந்தனர். 

Source: https://tamilwin.com/article/ariyanethran-visits-vadamaradchi-1726524722

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.