முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் கையளிப்பு

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 11 மாதம் 14 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற நாடாளுமன்ற பொது
தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர்
எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றைய தினம் (23) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுக்கள் 

இதன்போது
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதானமான தபால் மூலமாக வாக்கு விநியோகம் புதன் கிழமையில் மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து இடம்பெற்றது.

மொத்தமாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் 14222 பேர் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்திருந்தனர் எனினும் 14003 பேருடைய தபால் மூல வாக்களிப்புக்காண விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டு அவர்களுக்கான தபால் மூலமாக வாக்குகள் புதன்கிழமை தபால்
நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் கையளிப்பு | Batti Postal Original Ballot Papers Post Office

தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டவுடன் இம்மாதம்
மாதம் 30 ஆம் திகதி காவல் நிலையம், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும்,
அதுபோல் எதிர்வரும் 11 மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் ஏனைய
அலுவலகங்களிலும் மற்றும் நான்காம் திகதி மேலதிகமாக காவல் நிலையம், மாவட்ட செயலகம் மற்றும் தேர்தல்
அலுவலகத்திலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக வேண்டி எதிர்வரும் 11 மாதம் ஏழாம் மற்றும் எட்டாம் திகதிகளில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் தமது
வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/batti-postal-original-ballot-papers-post-office-1729711046

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.