அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பில் இணைக்கும் நோக்கில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ‘Next Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், 2029ஆம் ஆண்டளவில் 12 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களை வலுவூட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு இளைஞர்களை வழிநடத்துதல், சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சமுர்த்தி அபிவிருத்தி
அத்துடன், ஹோட்டல், நிர்மாணம், தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு சேவைத் துறைகளுக்கான பயிற்சி நெறிகளுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையான நிதி வசதிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்துடன் (SLITHM) இணைந்து, 2026ஆம் ஆண்டில் 1,500 இளைஞர், யுவதிகளுக்கு ஹோட்டல் துறையில் இலவச பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதியுடைய இளைஞர், யுவதிகள் www.nextsrilanka.lk இணையத்தளம் ஊடாகவோ அல்லது தமது பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் ஊடாகவோ பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (21) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்றது.
Source: https://ibctamil.com/article/new-government-scheme-for-children-from-low-income-1790065518

