முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சக்கரத்தில் சிக்கிய ஆடை! பல்கலைக்கழக மாணவியின் உயிரைப் பறித்த கோர விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் பின்ச் சக்கரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதுடன், அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக ஏற்பட்ட தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/clothes-caught-in-a-wheel-tragic-accident-takes-the-life-of-a-university-student-1790140990

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.