முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காருக்குள் பதுங்கிய தாய்–மகள்! துப்பாக்கியால் கண்ணாடியை உடைத்து கைது – பின்னணியில் அதிர்ச்சி

குருநாகல் –  பன்னல நகரில் நவீன சொகுசு காரொன்றை துரத்திச் சென்று இடைமறித்த கிரிவுல்ல பொலிஸார், அதிலிருந்த தாய், மகள் மற்றும் ஆண் ஒருவரை கைது செய்ததுடன், ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

பன்னல நோக்கி பயணித்த நவீன காரொன்றில் ஹெரோயின் கடத்தப்படுவதாக கிரியுல்ல பொலிஸாருக்கு நேற்று (22) காலை தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான காரை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். காரை நிறுத்துமாறு பொலிஸார் பலமுறை உத்தரவிட்ட போதிலும், அதன் சாரதி உத்தரவை மீறி தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், சுமார் 10 கிலோமீற்றர் தூரம் காரை துரத்திச் சென்ற பொலிஸார், பன்னல பகுதியில் வைத்து வாகனத்தை நிறுத்துவதற்காக அதன் டயர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அத்துடன், கார் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் ஏனைய வாகனங்களைப் பயன்படுத்தி அதன் பாதையும் மறிக்கப்பட்டுள்ளது.

கார் நிறுத்தப்பட்ட பின்னர், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பொலிஸார் அதனை அணுகியுள்ளனர். எனினும், சாரதி மற்றும் காரின் பின்பக்க ஆசனத்தில் இருந்த இரு பெண்களும் காரிலிருந்து வெளியேற மறுத்ததுடன், கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் T-56 துப்பாக்கியின் பாகத்தைப் பயன்படுத்தி முன்பக்க இடதுபுற ஜன்னல் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்துள்ளார். பின்னர் சாரதியும், அவரைத் தொடர்ந்து இரு பெண்களும் காரிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் தாய் மற்றும் மகள் எனவும், காரை செலுத்திய 36 வயதுடைய நபர் குறித்த பெண்ணின் காதலர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை சோதனையிட்டபோது 15 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 924,770 ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாரம்மல, கிரானே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், காரின் சாரதி வெல்வ, லப்பல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 19 வயதுடைய மகளை பாடநெறியொன்றில் சேர்ப்பதற்காக குருநாகலுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் தற்போது கிரியுல்ல பகுதியில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/mother-and-daughter-trapped-inside-the-car-shotgun-used-to-smash-the-glass-and-arrested—shocking-background-1790145311

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.