முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாகண்டல் கிராமத்தில் வெள்ள அனர்த்த ஒத்திகைப் பயிற்சி

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகின் ஏற்பாட்டில், மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் வெள்ள அனர்த்த ஒத்திகைப் பயிற்சி ஒன்று நேற்றையதினம் நடத்தப்பட்டது.

வெள்ள அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டவுடன் அவர்கள் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல், குறிப்பாக வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகள் இந்த ஒத்திகையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மேலும், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சென்றடைந்த பின்னர் அவர்களை முறையாகப் பதிவு செய்தல், அவர்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு உரிய உதவிகளை வழங்குதல், காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி வழங்குதல் மற்றும் காணாமல் போனவர்களைத் தேடி மீட்பது போன்ற அவசரகால நடவடிக்கைகளும் ஒத்திகை செய்யப்பட்டன.

இந்தப் பயிற்சியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், பிரதேச சபை, சுகாதாரப் பணிமனை, பொலிஸார், இராணுவத்தினர், கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள், மன்னாகண்டல் சிறுவர் கழகம் மற்றும் மன்னாகண்டல் கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

இவ்வொத்திகையின் மூலம், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைப் பெற்றவுடன் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

“முன்னெச்சரிக்கை தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் போது, அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது உயிர்களையும் சமூகத்தையும் பாதுகாப்போம்.”

Source: https://samugammedia.com/flood-disaster-drill-in-mannakandal-village-1790414076

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.