முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்புலுவாவ மலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய அனர்த்தம்.. அநுரவுக்கு நேரடியாக சென்ற தகவல்

அம்புலுவாவ மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமங்கள் மீண்டும் மண்ணில் புதையுண்டு போகலாம் என கம்பளை பிதேசத்தின் செயலாளர் ஆத்மா தில்ருஷி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். 

02 வருடங்களுக்கு முன் அறிவிப்பு

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மண்சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து பாரிய அழிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அம்புலுவாவ மலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய அனர்த்தம்.. அநுரவுக்கு நேரடியாக சென்ற தகவல் | A Major Disaster Is About Again Ambuluwawa 

எனவே தான் மீண்டும் அறியத் தருகின்றோம். மண்சரிவு ஏற்பட்டு பாரிய அழிவை சந்தித்த நிலையில் மீளவும் வெடிப்புக்கள் மற்றும் பாரிய கற்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கு பின்னரும் பொறுப்பான அதிகாரிகள் கனயீனமாக விடாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 

கிராம சேவகர்களின் அறிக்கை

இதேவேளை, கம்பளை பிதேசத்தில் உள்ள கிராமசேவகர்கள் அநேகர் தங்களின் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் கற் பாறைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் தொடர்பில் புகைப்பட சாட்சிகளுடன் பிரதேச செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்புலுவாவ மலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய அனர்த்தம்.. அநுரவுக்கு நேரடியாக சென்ற தகவல் | A Major Disaster Is About Again Ambuluwawa

அம்புலுவாவ மலையில் அரச காணிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் பல சட்டவிரோத நடவடிக்கைகளால் இவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், சில அரச கட்டிடங்கள் வெளியாருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் பல பாரிய கற்கள் வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளன. அதனால் எதிர்வரும் பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்