உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை பலரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், தன்னிடம் உள்ள அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பலர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து 13 முறை இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில தற்போது சர்ச்சையை கிளப்பி வருகின்றார்.
இந்த விவகாரம் தற்போது இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பல கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் வெளியிட்ட உண்மைகளை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு,