நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர். படத்துக்கு படம் அதிக கலெக்ஷனிலும், சம்பளத்திலும் வளர்ச்சியை கண்டவர்.
இப்போது தனது 68வது படமான கோட் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்பும், டப்பிங் வேலைகளை விஜய் முடித்துவிட்டார் என கூறப்படுகிறது, அடுத்து தனது 69வது படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என தெரியவில்லை.
நேற்று (ஜுன் 22) நடிகர் விஜய்யின் பிறந்தநாள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள். அதேபோல் கோட் படத்தின் 2வது பாடலும் வெளியாகி இருந்தது, யூடியூபில் டாப்பில் கலக்குகிறது.
வெற்றி படங்களின் நாயகன் கவினின் சம்பளம், சொத்து மதிப்பு விவரங்கள் என்ன தெரியுமா?
மகனின் போட்டோ
நடிகர் விஜய்யை போல அவரது மகன் சஞ்சய் சினிமாவில் களமிறங்கியுள்ளார், ஆனால் நாயகனாக இல்லை இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
படம் இயக்குகிறார் தகவல் வந்ததை தொடர்ந்து வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இந்த நிலையில் நடிகர் சஞ்சயின் போட்டோ ஒன்று வைரலாகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சஞ்சய் அப்படியே கோட் சூட்டில் அவரது அப்பா போலவே உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.