வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். பாலிவுட்டில் வெளிவந்த Tujhe Meri Kasam எனும் படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பின் தமிழில் எண்ட்ரி கொடுத்த இவர், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா
ஜெனிலியா
தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை ஜெனிலியா தான். இவர் தனது தாயுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சச்சின், பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்பிற்கு தமிழில் பல்லாயிரம் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

