அம்பாறை – நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா மலர் மாலையை கழட்டி
வீசிவிட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபை
எல்லைக்குட்பட்ட பழைய உஹன வீதி முதற்கட்ட அபிவிருத்தி பணிக்காக 475 மீற்றர்
தார் வீதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாவிதன்வெளி பிரதேச செயலாளர்
ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் நேற்று (20.11.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இந்த அபிவிருத்தியை யாரும் உரிமை கொண்டாட
முடியாது எனவும் இது தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்தித் திட்டம் எனவும் குறிப்பிட்டார்.
எச்சரிக்கை
இதன்போது, நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மக்கள் வரிப்பணத்தில்
மூலம் ஏற்படும் அபிவிருத்தியை மக்கள் உரிமை கொண்டாட முடியும் என பதில்
கூறினார்.

இதனையடுத்து, ஆதம்பாவா, அவர் அணிந்திருந்த பூ மாலையை கழற்றி, நாடாளுமன்ற உறுப்பினர் யாரும்
முகநூலில் பதிவிட்டால் இந்த பிரதேசத்திற்கு எந்த அபிவிருத்தியும் வராது என
குறிப்பிட்டு தனது வாகனத்தில் ஏறி பயணிக்க எத்தனித்துள்ளார்.

அதன் பின்னர், மீண்டும் வருகை தந்து
திரை நீக்கம் செய்த பின்னர் எந்த ஒரு நிகழ்விற்கும் யாருக்கும் மாலை மரியாதை
செய்ய கூடாது என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜீந்திரனிடம் கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.

