அதானி காற்றாலை திட்டம் (Adani Green Energy) குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்று,
அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கட்டண விகிதங்களை திருத்தத் தயாராக இல்லை என்றால், அதானி குழுமம் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண விகிதங்கள்
கட்டண விகிதங்கள் அதிகமாக உள்ளன, அவற்றை மாற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின்
கோரிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அதானி குழுமம் கட்டண விகிதங்களை திருத்தத் தயாராக இருந்தால் நாம்
விவாதிக்கலாம். அல்லது அவ்வாறு செய்யத் தயாராக இல்லை என்றால், அவர்கள்
திட்டத்திலிருந்து விலக முடிவு செய்யலாம்.
மக்களுக்கும் ஏற்படும் நன்மை
இது, அனைத்து முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று
அர்த்தமல்ல.
அத்துடன்,ஒரு நாட்டையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ சார்ந்து இருக்க, இலங்கை
தயாராக இல்லை.
நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் நன்மைகளை மட்டுமே, அரசாங்கம் கருத்தில்
கொள்ளும் என்றும் அவர் கூறினார்.