முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து மோசடி
செய்திருந்தால், அவர் மீது தேசிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கலாநிதிப் பட்டம் தொடர்பான சான்றிதழை விரைவில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற
உறுப்பினர் அசோக ரன்வல கட்சிக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் அவர்
இதுவரை அதைச் செய்யவில்லை.
அவர் தனது கலாநிதி பட்டம் குறித்து மோசடி
செய்திருந்தால், அவர் மீது தேசிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

