முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்
தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில்
கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை
சேனாதிராஜா ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம்
ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு : தவறின் சட்ட நடவடிக்கை

வடக்கு ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு : தவறின் சட்ட நடவடிக்கை

தவிர்க்க முடியாத காரணத்தினால்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை
இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத
காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டதாக கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராஜா ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு
தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு | Adjournment Of The Central Committee Meeting Itak

திருகோணமலையில் வழக்கு

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதானால் கட்சி

உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் இதனால்
கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு | Adjournment Of The Central Committee Meeting Itak

இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தை
அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேறிய 25 இலட்சம் பேர் :வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை விட்டு வெளியேறிய 25 இலட்சம் பேர் :வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

இதன்போது அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது
வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள்
குறித்து கலந்துரையாடப்படும் என மாவை சேனாதிராஜா
தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.