ட்ரம்பின் பரஸ்பர வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் வரி பிரச்சினையில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் எதிர்பார்ப்பதாக நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரி நிறுத்தம்
உலகில் உள்ள சுமார் நூறு நாடுகளை இலக்காகக் கொண்டு வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 (ஏப்ரல்) ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன்போது, இலங்கை மீது 44 வீத வரியை ட்ரம்ப் அறிவித்திருந்ததுடன், அது பின்னர் பல்வேறு சர்ச்சைகள் காரணமாக 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
இந்த நிலையில், இது தொடர்பில் அண்மையில் இலங்கை பிரிதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்று கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்ததுடன், அது குறித்த அறிக்கையும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்க வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/19yui_BChOw

