குட் பேட் அக்லி
ஒரு ரசிகரின் கையில் அவரது ஆசை நாயகனின் போட்டோ அல்லது வீடியோ கிடைத்தாலே மாஸ் செய்துவிடுவார்கள்.
அப்படி தீவிர ரசிகராக இருப்பவருக்கு அவரது கனவு நாயகனையே இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா விடுவார்கள்.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் தான் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கி மாஸ் காட்டியுள்ளார்.
இப்பட டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பு கிடைத்துள்ளது.
முக்கிய தகவல்
குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளதாம், இப்படம் முந்தைய தமிழ் படங்களின் வசூலை தாண்டும் என கூறப்படுகிறது.
படத்தை தமிழ்நாடு முழுவதும் 1000 திரைகளுக்கு அதிகமாக ரிலீஸ் ஆக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
திரையரங்க ரிலீஸ் பார்க்கும் போதே எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பது நமக்கே நன்றாக புரியும்.