அஜித் கார் ரேஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித், துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்துகொண்டார்.
அஜித்தின் இந்த குழுவின் அவருடன் இணைந்து, Fabian, Detry, Camy ஆகியோர் உள்ளனர். அஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் கூட்டமும் அங்கு திரண்டனர். அதை பார்த்து அங்கிருந்தவர் மிரண்டுபோனார்கள்.
வாடிவாசல் படத்தின் கதாநாயகி இவர் தானா.. முதல் முறையாக இணையும் ஜோடி
3வது இடத்தை பிடித்த அஜித்
24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த கார் ரேஸ் நேற்று மதியம் 1.30 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த கார் ரேஸில் Porsche 992 என்கிற காருடன் அஜித் குமாரின் குழு 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
டாப் 3ல் இடத்தை பிடித்துள்ள நிலையில், தனது வெற்றியை கொண்டாடும் விதமாக, நடிகர் அஜித் தனது கையில் இந்திய கொடியை ஏந்தி அனைவரையும் சந்தித்தார். அஜித்தின் இந்த வெற்றியை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
We Won😭🔥#AjithKumar #AjithKumarRacing pic.twitter.com/gAnwftJFhj
— Scott Calwin (@Scottcalwin) January 12, 2025