நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும், தங்கள் உண்மையான நன்மை பெறும் உரிமையாளர்கள் யார் என்பதைக் ஆறு மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் மோசடி, ஊழல் சம்பந்தமான பல கதைகள் எப்போதும் கேட்கப்பட்டுவருகின்றன. அதனால்தான் இத்தகைய சட்டதிருத்தங்களை மேற்கொள்கிறோம்.
மறைத்துவைத்துள்ள சொத்துக்கள்
வீடுகளில் இருக்கும் சாரதிகளின் பெயரில் நிறுவனங்கள் வாங்கப்பட்டதற்கான வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.
பணச்சுழற்சி (Money Laundering) சம்பந்தமான கதைகளும் நம்மிடம் உள்ளது.டெய்ஸி ஆச்சியும் கதையும் இதே போல் தான்.
இந்த திருத்தச்சட்டத்தின் நோக்கம், உலகளாவிய நிதி நிறுவனங்களுடன் நாட்டின் உறவுகளில் ஏற்படும் தடைகளைத் தவிர்ப்பதாகும்.
நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும், தங்களுடைய முதன்மை நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் உண்மையான நன்மை பெறும் உரிமையாளர்கள் யார் என்பதை அரசாங்கத்திடம் ஆறு மாதங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
இந்தச் சட்டத்திருத்தம், சொத்தை மறைத்துவைக்கும் நபர்களின் சொத்துகளை வெளிக்கொணரும் சட்டத் தளத்தை உருவாக்கும்” என்றார்.