முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸ் தரகர் என்று தாக்குதல்..!

அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக எழுந்த சந்தேகமே காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை, இடம்தொட்ட பௌத்த விகாரைக்கு அருகில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

‘பொடி சுட்டா’ என்று அழைக்கப்படும் கிருஷாந்த மெண்டிஸ் என்ற நபரே இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

குற்றவியல் குழு

45 வயதான குறித்த நபர், நான்கு குழந்தைகளின் தந்தை என்றும், அவர் அந்தப் பகுதியில் கூலித் தொழிலாளியாக வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸ் தரகர் என்று தாக்குதல்..! | Ambalangoda Gunshot New Update

அதேவேளை, அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இதுவரை பதிவாகவில்லை என்றும், பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், இந்தப் படுகொலையை சமன் பிரியந்த எனப்படும் சமன் கொல்லா என்ற நபர் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

ஒரே குடும்பம் கொலை… 

மேலும், அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிப்பதாக சந்தேகித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸ் தரகர் என்று தாக்குதல்..! | Ambalangoda Gunshot New Update

கொலை செய்யப்பட்ட நபர் கடந்த ஜனவரி மாதம் சமன் கொல்லா என்ற, குற்றவியல் குழுவைச் சேர்ந்த நபரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கடந்த2016 டிசம்பர் 5ஆம் திகதி அன்று, அம்பலங்கொடையின் இடம்தொட்டா பகுதியில், பொலிஸாருக்கு தகவல் கொடுப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் நான்கு வயது குழந்தை ஆகியோர் சமன் கொல்லா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.